பேட்ட பொங்கலுக்கு வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது. இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே அமைந்துள்ளது.
நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினியை பார்த்தது போல் உள்ளதாக பேட்டையை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ரஜினி பாபிசிம்ஹா வீட்டில் போய் மிரட்டி, திடீரென்று ‘என் கண்ணாடி, கண்ணாடி’ என குழந்தை போல் துள்ளி வருவார்.
இந்த காட்சி ஸ்கிரிப்டிலேயே இல்லையாம், ரஜினியே நான் இதை செய்கிறேன் என்று சொல்லி செய்ததாக, அந்த காட்சியில் நடித்த ஆடுகளம் நரேன் கூறியுள்ளார்.