அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் குழுமத்தின் பில்போர்ட் பட்டியல் பாப் மற்றும் உலகளாவிய இசைகளை தரம் பிரிப்பதில் பிரசித்திப்பெற்றது. இந்த பட்டியலில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப்பில் டாப் இடம் பிடித்த பாடல்களின் தரவரிசை வாரந்தோறும் வெளிவரும்.
இந்த பட்டியலின் இந்த வாரத்திற்கான தரவரிசையில் டாப்-5 இடங்களில் தனுஷின் மாரி-2 படத்தின் ரௌடி பேபி பாடலும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த பாடல், தனுஷ்- அனிருத் கூட்டணியில் வெளியான why this kolaveri? பாடலுக்கு பிறகு இந்த பட்டியலில் இடம் பிடிக்கும் முதல் தமிழ் பாடலாகும்.
பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடியிருந்த இப்பாடலின் வீடியோ வெளியான நாளே 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப்பை கலக்கி வருகிறது.