அஜித்குமார் நடித்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி ரஜினியின் பேட்ட படத்துடன் வெளியானது. வெளிநாடுகளில் பேட்ட படம் வசூல் குவித்திருந்தாலும் தமிழ்நாட்டில் விஸ்வாசம் தான் அதிக வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் ஒரே காரணம் படத்தில் உள்ள செண்டிமெண்ட்களும் ஆபாசமில்லாத காட்சிகளும் தான். இதனால் ரசிகர்கள் குடும்பங்களுடன் வந்து படத்தை பார்க்கின்றனர்.
குடும்பத்துடன் வந்தால் பரவாயில்லை, மதுரையிலுள்ள மாயாண்டி என்ற திரையரங்கிற்கு சில ரசிகர்கள் காளை மாடுகளுடன் வந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியான தியேட்டர் நிர்வாகம் காளைகளை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனால் அந்த ரசிகர்கள் படம் பார்க்காமலேயே சென்றுள்ளனர்.