சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் பேட்ட படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதுமே பேட்டைக்கு நல்ல வசூல் தான் வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் அமெரிக்காவில் வேற லெவல் தான் வசூல்.
2 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது பேட்ட அங்கு, இந்நிலையில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் 2.0, கபாலி, பேட்ட, காலா, எந்திரன் என முதல் 5 இடங்களில் ரஜினி படமே உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் தான் விஜய்யின் மெர்சல் படம் உள்ளது. இப்படி தொடர்ந்து அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸை ரஜினி ஆக்ரமித்துள்ளார்.