தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி-63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா, கதிர், விவேக் நடிக்க இதில் வில்லனாக நடிப்பது யார் என்று பெரிய கேள்வி எழுந்து வருகின்றது.
பலரும் இந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் தான் நடிப்பார் என்று கூற, நமக்கு கிடைத்த தகவலின்படி மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் வில்லனாக இதில் நடிப்பார் என தெரிகிறது.