பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களுடன் பணிபுரிந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்தி பட நடிகை பிபிதா பக்கும் துணை இயக்குனர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அதில், பிரபல இயக்குனர் ராம் கோபாலிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் என்னை அணுகி தான் இயக்கவுள்ள படத்தை பற்றி சொன்னார். இதனால் நாங்கள் இருவரும் நட்பானோம்.
ஆனால் ஒருநாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது காருக்குள் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். என்னை விட்டுவிடு என கெஞ்சினேன், அதற்கு அவர், லூசு மாதிரி பேசாதே, நீயும் தான் ஜாலியாக இருக்கலாம் என கூறி பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்றார்.