விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்து மிக பிரபலமானார் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் எந்த படம் வர உள்ளது என்பது தெரியவில்லை என்றாலும் தெலுங்கு படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் இவர் நகை கடை ஒன்றின் திறப்பு விழா நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். பிறகு பேட்டி அளித்த கீர்த்தி, தான் தற்சமயம் திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை.
இன்னும் நிறைய படங்களில் நடிக்க விரும்புகிறேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இளம் இயக்குநர்கள் நிறைய பேர், அடுத்தடுத்து படம் இயக்க வருகின்றனர். எல்லாரும் வித்தியாசமான சிந்தனைகளோடும், திறனோடும் களத்தில் இறங்குகின்றனர் என்றார்.