சினிமாவில் எல்லா நடிகர்களும் மற்ற நடிகர்களுடன் இணக்கமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இது தமிழ் சினிமாவுக்கும் தான் பொருந்தும்.
இதை மெய் என்பது போல, சென்னையில் பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், வரும் பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட உள்ளேன்.
ரஜினி, கமல் அரசியலில் நுழைந்துள்ளனர். ஆனால் அவர்கள் சினிமாவில் கூட சக நடிகர்களே தவிர எனக்கு நண்பர்கள் கிடையாது. அதனால் அவர்களுடன் கூட்டணி அமையாது என்றார்.
ஆனால் மற்றொரு நடிகரான விஜய்காந்த் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைத்து கொள்வோம் எனவும் கூறினார்.