ரஜினியின் பேட்ட படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியுடன் சனந்த் என்பரும் நடித்திருந்தார். இப்படத்தில் பணியாற்றியதை பற்றி கூறிய சனந்த், முதலில் நான் இயக்குனர் ஆவதற்கு தான் சினிமாக்குள் வந்தேன்.
ஒரு குறும்படத்திற்காக கதை எழுதி கார்த்திக் சுப்புராஜ் அண்ணாவிடம் காட்டினேன். அதை படித்து பார்த்த அவர், இது தான் முதல் கதையா என கேட்டார். ஆமாம் என்றேன். இதை படமாக எடுக்க வேண்டாம் என கூறிவிட்டார். பிறகு அவரே பேட்ட படத்திற்காக அழைத்தார் என்றார்.