விஸ்வாசம் படம் மாஸ் ஓப்பனிங் உடன் களத்திற்கு வந்துவிட்டது. ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றார்கள். முதல் காட்சியை சில சினிமா பிரபலங்களும் பார்த்ததோடு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சிவா இயக்கத்தில் இதுவரை அஜித் நடித்த படங்களில் ஏதாவது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கும். அப்படியாக செண்டிமெண்ட்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.
இந்த முறை குடும்பப்பாங்கான கதைக்களத்துடன் சிவா இறங்கியுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் படத்தின் மிக முக்கிய விசயத்தை பற்றி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் இந்த மாதிரி கமர்சியல் படம் எடுக்கிறவங்க பெரும்பாலும் பொண்ணுங்களை மட்டம் தட்டற மாதிரிதான் காமிப்பாங்க. இந்த விஷயத்துல சிவா இஸ் டிப்பரண்ட். சீரியஸ்லி. அஜித்கிட்ட ஒரு இடத்தில கூட அடங்கிப் போகல நயன்தாரா என கூறியுள்ளார்.
இந்த மாதிரி கமர்சியல் படம் எடுக்கிறவங்க பெரும்பாலும் பொண்ணுங்களை மட்டம் தட்டற மாதிரிதான் காமிப்பாங்க. இந்த விஷயத்துல சிவா இஸ் டிப்பரண்ட். சீரியஸ்லி. அஜித்கிட்ட ஒரு இடத்தில கூட அடங்கிப் போகல நயன்.. ??
— விச்சு (@r_vichu) January 10, 2019