வரும் பொங்கலை முன்னிட்டு இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின்றன. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் கூடினர்.
தமிழகத்தில் ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவின் படம் வெளியானாலே அனைத்து தியேட்டர்களும் களைகட்டத் துவங்கி விடும். ஆனால் இன்று ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் திரைப்படங்கள் வெளியாவதால் நள்ளிரவு முதலே அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம் பாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.