சீரியல்கள் எல்லாம் இப்போது நவீன காலத்திற்கேற்ப அப்டேட்டுடன் எடுக்கப்படுகிறது என்றே சொல்லலாம். அதிலும் சீசனுக்கு ஏற்றார் போல் அனைத்து சீரியல்களிலும் சில நேரங்களில் ஒரே மாதிரி அமைந்துவிடுகிறது.
ஆனாலும் மக்களிடத்தில் அதிகம் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் அண்மையில் வந்த செம்பருத்தி சீரியல் மக்கள் பலரை மிகவும் ஈர்த்துள்ளது. அதை காண்போரின் எண்ணிக்கையும் கூடிவிட்டது.
ஆனால் மற்ற சானல்கள் பக்கம் சற்று சென்றால் நாயகி, நந்தினி, அரண்மனை வீடு, கல்யாண வீடு ஆகிய சீரியல்களுக்கும் ஒரு தனி ரசிகர்கள் வட்டாரம் இருக்கத்தான் செய்கிறது.
இவற்றுக்குள்ளான போட்டியில் கடந்த வருட டிசம்பர் மாதத்தின் இறுதி வார கணக்கெடுப்பின் படி செம்பருத்தி சீரியல் முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துள்ளது. 4 ம் இடத்தில் இருந்த நாயகி சீரியில் 3 க்கு முன்னேறியுள்ளது. 4 3 ம் இடத்தில் இருந்த கல்யாண் வீடு சீரியில் 5 க்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் விஜய் டிவி சானலை இந்த லிஸ்டில் காணவில்லை