சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல பிரபலங்கள் குடிக்கு அடிமையாகியுள்ளதாக கேட்டிருப்போம். அதை அப்படியே தன் சுயசரிதை புத்தகத்தில் உறுதி செய்துள்ளார் நடிகை மணிஷா கொய்ராலா.
இவர் பம்பாய், ரஜினியின் பாபா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர்.
அவர் பள்ளி படிக்கும் காலம் முதலே கூச்ச சுபாவம் அதிகம் கொண்டவராம். அதனால் யாரிடமும் அதிகம் பழக மாட்டாராம். நேபாள மன்னர் பரம்பரையை சேர்ந்த அவர் சினிமாவில் அறிமுகமானதும் அதிகம் பேரிடம் பழக வேண்டியிருந்தது.
“முதலில் குடிக்க ஆரம்பித்ததும் கூச்சம் பறந்தோடிவிட்டது. அதனால் இன்னும் அதிகம் குடிக்க ஆரம்பித்தேன்.
நாளடைவில் அவர் குடிக்கு அடிமையாகிவிட்டேன். எப்போதும் என் வீட்டில் பார்ட்டி நடக்கும். இல்லையென்றால் தோழிகள் வீட்டில் பார்ட்டி நடக்கும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் மனிஷா கொய்ராலா கேன்சரால் பாதிக்கப்பட்டு, பலவருடங்கள் போராடி தற்போது மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது