பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை தீபிகா படுகோன். கடந்த வருட இறுதியில் தான் இவருக்கும் அதே சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் நடைபெற்றது.
மிக பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது. பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி பொது வாழ்க்கையில் பல முறை மன உளைச்சலுடன் உணர்வுப்பூர்வமாக போராடியதாக கூறியுள்ளார். மேலும் எலிசபெத் மகாராணியின் மருமகள் இளவரசி டயானாவின் மரணம் அவரை பெரும் அதிர்ச்சியாக்கியதாம்.
மேலும் டயானாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்ற கேள்விக்கு எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், அவர் மக்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிகவும் பிடிக்கும்.
அவரின் பல வீடியோக்களை பார்த்துள்ளேன். ஆனால் அவரை சந்திக்காதது துரதிர்ஷ்டம். எனக்கு அவர் இல்லை என தெரிய வந்த போது நான் மிகவும் அழுதேன். என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.