கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் அந்த சீரியலை தொடர்ந்து நடிக்க போவதில்லை என்று கூறி பின் சினிமாவில் படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.
அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார், இதற்கு நடுவில் சமூக வலைதளங்களில் புதிய புதிய போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை போட்டு ரசிகர்களையும் ரசிக்க வைப்பார்.
இப்போது அவர் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவல் உண்மை தானாம், அவருக்கு பிடித்த ஒரு நாவல் எழுதி வருகிறாராம், எழுதுவது முடிந்ததும் தான் எப்படி வெளியிடுவது என்று யோசிக்கவே இருக்கிறாராம்.
ஆனால் கண்டிப்பாக நடிப்பை நிறுத்த மாட்டேன் என்று கூறி ரசிகர்களுக்கும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளார்.