மின்சார கனவு படத்தில் நடித்தவர் கஜோல். ஒரு காலத்தில் இந்தி சினிமாவில் கனவுகன்னி நடிகையாக வலம் வந்தவர். தமிழ் ரசிகர்களுக்கும் இவரை அதிகம் பிடிக்கும். கடந்த ஆண்டு தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் அவர் நடித்திருந்தார். இவர், இந்தி நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து மணந்தவர். இவர்களுக்கு மகள் நைசா மற்றும் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்துடன் தாய்லாந்து சென்றிருந்தனர்.
அங்கு நீச்சல் உடையில் நைசா விதவிதமாக போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் கஜோல் வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஷாருக்கானும் தனது மகளின் நீச்சல் உடை படங்களை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு, நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளானார். அதேபோல் கஜோலுக்கும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.