நடிகை த்ரிஷா 16 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணியில் இருப்பவர். அவர் அடுத்து சூப்பர்ஸ்டார் நடித்துள்ள பேட்ட படத்தில் நடித்துள்ளார். அதன் ரிலீஸுக்காக தற்போது காத்திருக்கிறார்.
இதுஒருபுறமிருக்க அவர் பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தோழியுடன் சேர்ந்து திருடினேன் என ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். வெளியே சென்ற அவர்கள் கையில் காசு எதுவும் இல்லாததால் ஒரு கடைக்குள் புகுந்து 2$ மதிப்புள்ள சாக்லேட் மற்றும் வாழைப்பழத்தை திருடிக்கொண்டு ஓடியுள்ளனர்.
“அது போல இனி செய்யவே மாட்டேன்” என த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் போட்டோவை போட்டு குறிப்பிட்டுள்ளார்.