தமிழ்சினிமாவில் தற்போது டாப் நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு என்று பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வசூல் சாதனைகள் படைத்துள்ளது. இவர் தற்போது கார்த்திசுப்ராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த பேட்ட திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளனர்.இப்படத்தில் பல முன்னனி திரைப்பிரலங்கள் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது பேட்ட திரைப்படத்தின் டீரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் எடிட்டர் சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர் பேட்ட திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு சண்டை காட்சி இருப்பதாகவும் அந்த காட்சியில் திரையரங்குகள் அதிரும் என்று கூறினார்.இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.