தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய். தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பொறுத்தவரை இவர்களது படங்கள் தான் அதிகம் மோதுகிறது.
இப்போது கூட சர்கார் சாதனையை 2.0 முறியடித்ததா என அதிகம் பேசப்பட்டது. 2.0, சர்கார், மெர்சல் எல்லாம் படு ஹிட், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் என்று கூறப்பட்ட நிலையில் எல்லா படங்களும் தோல்வி தான் விநியோகஸ்தர்களுக்கு என்று அதிர்ச்சி கிளப்பியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.
மெர்சல் படம் சுமார் 25 சதவீதம் வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமாம். 2.0, சர்கார் என எல்லாமே நஷ்டம் தான் என அடித்து கூறுகிறார். விளம்பரத்துக்காக பத்திரிக்கையாளர் இப்படி லாபம் என கூறுகிறார்கள் என்றார்.