மிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி எந்திரன் 2.0 திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த அனைவரும் 2.0 திரைப்படத்தினால் இந்திய சினிமாவிற்கே பெருமை என்று கூறினர்.
இந்நிலையில் இந்த படம் தற்போது வரை 900 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. இதுவரை இந்த அளவிற்கு அதிகமான வசூலை தற்போது வரை எந்த ஒரு தமிழ் படமும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.இதனை தற்போது ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.