தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒரு மிமிக்கிரி கலைஞனாக அறிமுகமாகி தனது திறமையால் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும், சொந்த முயற்சியாலும் இந்த அளவிற்கு வளந்துள்ளார் சிவா.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக சீமராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன் கனா படத்தை தயாரித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக சிவா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சிவாவின் கடந்த கால வாழ்க்கை பற்றியும், அவர் படித்த பள்ளி, கல்லூரி என அனைத்தையும் பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும் சிவாவின் நண்பர்கள் மற்றும் சிவாவின் அக்காவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது தனது அக்கா பற்றி பேசினார் சிவா. என் அக்கா ரொம்ப நல்லா படிப்பாங்க. 12 ஆம் வகுப்பில் 1134 மார்க் எடுத்தாங்க. டாக்டர் ஆகணுன்றதுதான் அக்காவின் ஆசை. ஆனால் கட் ஆப் மார்க் குறைந்ததால் மருத்துவ சீட்டு வாங்க 15 லட்சம் கட்ட சொன்னார்கள். எப்படியோ எனது அப்பாவும் 15 லட்சம் தயார் செய்து கல்லூரியில் கட்டுவதற்காக சென்றுவிட்டார்.
பணம் கட்ட சில நிமிடங்கள் இருக்கும்போது பணம் கட்ட வேண்டாம், அடுத்த முறை நான் நன்றாக தேர்வு எழுதி மெரிடில் சீட்டு வாங்குகிறேன் என்று என் அக்கா கூறிவிட்டார். அவர் சொன்னது போலவே அடுத்த முறை மெரிடில் பாஸ் ஆகி சீட் வாங்கிவிட்டார்.
அவர் சீட் வாங்கிய கொஞ்ச நாட்களிலேயே எனது அப்பா இறந்துவிட்டார். ஒருவேளை 15 லட்சம் கட்டியிருந்தாள் எங்கள் குடும்பம் என்ன ஆகியிருக்கும். எனது அக்கா அன்று எடுத்த முடிவால் எங்கள் குடும்பம் தப்பித்தது என்று சிவா கூறினார்.