தல அஜித்குமார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம் . இந்த படத்தை சத்ய ஜோதி பில்ம்ஸ் தயாரித்து வருகிறது. இமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றது.
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் எப்பொழுது என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று இரவு விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று இரவு படத்தின் ட்ரைலர் இணையத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலைவி வருகிறது.