பிரபல சின்னத்திரை நடிகர் கவுதம் டே தனது 65வது வயதில் காலமானார். பெங்காலி சின்னத்திரை தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கவுதம் டே. இவர் நடித்த ராஜா, ராணி ராஷ்மோனி போன்ற தொடர்கள் இவருக்கு நல்ல பெயர்களை பெற்று தந்தது.
நடிகர் கவுதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெரு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கவுதம் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த கவுதமுக்கு மனைவியும், மகளும் உள்ளனர்.
கவுதமின் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ள நிலையில் அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இதே போல பல நடிகர், நடிகைகள் கவுதம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.