பாலிவுட்-ன் சூப்பர்ஸ்டார்களில ஒருவரான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜீரோ படம் கடந்த 21-ம் தியதி உலகமெங்கும் வெளியாகியது.
இந்த படத்தில் இவருடன் நடிகைகள் காத்ரினா கைப்,அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.இவரின் எதிரியாக கருதப்படும் சல்மான்கான் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார்.தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் அவர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
பலரிடம் மோசமான விமர்ச்ச்சனத்தையும்,சிலரிடம் சுமார் விமர்ச்ச்சனத்தையும் பெற்றது இந்த படம்,பல விமர்ச்சகர்கள் இந்த படத்தை கழுவி கழுவி ஊத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் முதல் நாளில் 20.14 கோடியை இந்தியாவில் வசூலித்திரு ந்தது,இரண்டாவது நாளில் 18.22 கோடியும்,மூன்றாவது நாளான நேற்று 20.71 கோடியும் வசூலித்திருக்கிறது.மொத்தம் மூன்று நாளும் சேர்த்து இந்தியாவில் மட்டும் இந்த படம் 59.07 கோடியை வசூலித்துள்ளது.
ஷாருக்கான் படங்களிலே அதிகம் விளம்பரப் படுத்தப்பட்ட படம் இதுதான்,இருந்தும் இப்படி பல்ப் வாங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.ஷாருக்கானின் கடைசி படமும் படுபிளாப் ஆகியிருந்தது.இதன் மூலம் ஷாருக்கான் தனது மார்க்கெட்டை இழந்து கொண்டே வருகிறார் என பல பிரபல விமர்ச்சகர்கள் கூறி வருகின்றனர்.
தமிழ் நடிகரான விஜய் நடித்த சாதாரண கமெர்சியல் படமான சர்கார் முதல் நாள் இந்தியா முழுவதும் பெற்ற வசூலை,இரண்டு நாள் ஆகியும் இந்தியா முழுவதும் பிரபலமான ஷாருக்கான் படம் அந்த வசூலை தொடக்கூட முடியவில்லை என விஜய்யை தற்போதும் புகழ்ந்து வருகின்றனர்.