இத்தனை படங்கள் வெளியானாலும் 2.0 படம் தூக்கிய நிலையிலும் சர்கார் செய்யும் சாதனை பாருங்க.
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக தளபதி விஜய் இருந்து வருகிறார். இவரது படத்திற்கு எப்போதும் தனி மாஸ் உண்டு.
அப்படி இவர் படம் வெளியானால் படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்னும் பல சாதனைகளை படைக்கும். அப்படி தான் சர்கார் படமும் பல சாதனைகள் செய்தது.
இந்நிலையில் சர்கார் படம் 50 நாள் கொண்டாட்டத்தை முடித்தது. இதனால் படத்தை தூக்கி நிறைய புதிய படங்களை இறக்கினர். இதில் அத்தனை படங்களுக்கு நடுவிலும் சர்கார் படத்தை சில தியேட்டர்களில் ஒரு காட்சி ஓடுகிறது. அதிலும் சென்னையில் பிரபல அபிராமி திரையரங்கம் தனது சக்தி அபிராமி திரையில் மாலை காட்சி இந்த படம் இன்னும் ஓடி கொண்டு இருக்கிறதாம்.