அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் படத்தில் ஏன் நடித்தேன் என்பது பற்றி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கமளித்துள்ளார்.
தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. சமீபத்தில் இவர் அந்த தொலைக்காட்சியிலிருந்து விலகினார். அதன் பின் சினிமாத்துறையில் கால் பதிக்கப்போவதாகவும் சில செய்திகள் வெளியானது.
அதை நிரூபிக்கும் வகையில், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத், அடுத்து அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஒரு பாண்டே நடித்து வருகிறார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாண்டே “வினோத் என் நண்பர். அவர் கேட்டுக்கொண்டதால் இந்த படத்தில் நடிக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி, மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் இப்படம் வெளியாகவுள்ளது.