‘பியார் பிரேமா காதல்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்களும் பயங்கர ஹிட் அடித்தன. இந்தப் படத்தின் ட்ரெய்லரை, வெளியான ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருந்தனர்.
தற்போது படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் திரைக்கு வந்த பின்னர் படக்குழுவினரால் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோவும் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: ரஜினி, கமலால் அதிமுக வாக்கு வங்கியை பிரிக்க முடியாது – ஜெயக்குமார் பேட்டி – வீடியோ