ஒரே ஒரே நேரத்தில் 5 தமிழ் படங்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது அவைகள் தனுஷின் “மாரி -2” விஜய் சேதுபதியின் “சீதக்காதி” ஜெயம் ரவியின் “அடங்க மறு” வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷாலின் “சிலுக்குவார்பட்டி சிங்கம்” மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்து புதுமுக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் “கனா” என அனைத்து படங்களும் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கின்றன
இவைகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதியும் “சீதக்காதி” மற்றும் தனுஷின் “மாரி 2” ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆனால் புதுமுக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கானா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் விவசாய பிரச்சினையும் முக்கியமாக பேசப்பட்டுள்ளது படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக துடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறந்த நடிப்பை தந்துள்ளார் மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் மேலும் சத்யராஜ் விவசாயியாக நடித்து அனைவரையும் நெகிழ வைத்து உள்ளார் என்றே கூறவேண்டும்
இந்நிலையில் வெளியான அனைத்து படங்களும் ஓரங்கட்டி கனா திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது மேலும் மற்ற படங்களை எடுத்துவிட்டு கனா திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள் இதனால் கனா படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது மேலும் இந்த படத்திற்கு அனைத்து ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது