விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படம் கடந்த நவம்பர் 6 ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து வைத்தது.
படத்திற்கு எப்படியான பிரச்சனைகள் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதையும் தாண்டி வசூல், இணையதள சாதனைகள் என இடம் பிடித்தது. போஸ்டர், பாடல்கள் என எல்லாம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
தற்போது படத்தின் 50 வது நாள் வரும் டிசம்பர் 30 ல் கொண்டாடப்படுகிறதாம். இதற்காக சென்னை ரோகினி தியேட்டரில் முன்பதிவு தொடங்கி விட்டார்களாம்.