நடிகைகள் பொது இடத்திற்கு வருகிறார்கள் என்றாலே அவர்களை பார்க்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடிவிடும். அதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.
அதுபோன்று பாலிவுட் நடிகை ஸரீன் கான் இன்று ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்தபோது பெரிய அளவில் கூட்டம் இருந்தது. அதை பயன்படுத்தி சிலர் அவரை தகாத முறையில் தொட்டுள்ளனர்.
அவர் விழா முடிந்து காரில் ஏற சென்றபோது அது நடந்தது. கோபமான நடிகை அவர்கள் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் கீழே தள்ளி விட்டுள்ளார்.
சம்பவம் நடந்த உடனேயே பதிலடி கொடுத்த நடிகைக்கு தற்போது பாராட்டு குவிந்து வருகிறது.