அட்லீ-விஜய் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்களை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் முதல் நாள் பார்ப்பது போலவே ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.
இரண்டு மாஸ் படங்களை கொடுத்த இவர்களது கூட்டணியில் அடுத்து ஒரு படம் தயாராகிறது, வெளிநாட்டில் எல்லாம் படப்பிடிப்பிற்கான இடங்களை படக்குழு பார்த்து வருகின்றனர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விளையாட்டை மையப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வந்த விஷயம் என்னவென்றால் மலையாள சினிமாவின் குழந்தை நட்சத்திரம் Maheen என்பவர் இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வருகின்றன.
குழந்தைகளுடன் விஜய் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்படும், இப்படத்திலும் அப்படி கியூட் காட்சிகளை எதிர்ப்பார்க்கலாம் போலு தெரிகிறது.