நடிகர் விஷால் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்று வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிதி திரட்டுகிறார்.
இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் மற்றும் நடிகர் சங்க செயலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
தற்போது ஆயிஷா என்கிற 8 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக ரூபாய் 21 லட்சம் பணத்தை பல்வேறு நபர்களின் உதவியுடன் திரட்டியுள்ளார்.
விஷால் அந்த பணத்தை சிறுமி ஆயிஷாவிடம் வழங்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்பணத்தை இவர் 1915 நபர்கள் உதவியுடன் பெற்றுள்ளதாக அதில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆயிஷா நன்றாக குணமடையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.