வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் விஷ்ணு விஷால். அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இதில் குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது, அண்மையில் அவரின் நடிப்பில் வந்த ராட்சஸன் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது.
அடுத்தாக அவருக்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வந்து ரசிகர்களை கவர்ந்து. இப்படம் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் வந்துள்ளது.
தயாரிப்பாளர் வேறுயாருமல்ல அவரின் மகன் ஆர்யன் தானாம். அந்த பையனுக்கு வரும் ஜனவரி 31 வந்தால் வயது 2. இதை அவரே புகைப்படத்தை போட்டு டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
#SilukkuvarpattiSingam producer #ARYANRAMESH visits the office to see if promotions r goin on well or no 🙂 pic.twitter.com/G6T3T6NoJD
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) December 15, 2018