ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படம் வெளியான நேரம் இருந்தது.
இதனால் ஆங்காங்கே கட்அவுட்களும் பேனர்களும் இப்படத்திற்காக நிரம்பி வழிந்தன. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொல்லம் நண்பன்ஸ் என்ற விஜய் ரசிகர் மன்றத்தின் மூலமாக 175 அடியில் மிகப்பெரிய கட்அவுட் வைக்கப்பட்டது.
மேலும் இந்த கட்அவுட் தான் இந்தியாவில் ஒரு நடிகருக்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் என்ற சிறப்பையும் பெற்றது. ஆனால் தற்போது மோகன்லாலின் நடிப்பில் வெளியாக உள்ள ஒடியன் என்ற படத்திற்காக மோகன்லால் 200 அடியில் கட்அவுட் வைக்கப்பட்டதாக கூறி ஒரு கட்அவுட்டை காட்டினர்.
ஆனால் அது 130 அடிதானாம்.