தமிழ் சினிமா தற்போதெல்லாம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. மிகப்பெரிய மார்க்கெட் உலகம் முழுவதும் உருவாகிவிட்டது.
அந்த வகையில் 2.0 உலகம் முழுவதும் ரூ 500 கோடியை தாண்டிய வசூலை எடுத்தாலும், தமிழகத்தில் என்ன வசூல் என்பது தெளிவாக யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், எந்திரன்(ரூ 105கோடி) வசூலை 2.0 முந்திவிட்டதாக கூறியுள்ளனர், மேலும், தமிழகத்தின் அதிக வசூல் பாகுபலி-2, இப்படம் ரூ 145 கோடி வரை இங்கு வசூல் செய்திருந்தது.
இரண்டாவது மெர்சல் மற்றும் சர்கார் ரூ 126 கோடி வரை வசூலித்துள்ளது, இதில் 2.0, இன்னும் மெர்சல், சர்காரை தொட சுமார் ரூ 16 கோடி வரை இருப்பதாக கூறப்படுகின்றது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஒரு சிலர் தாண்டியே விட்டதாகவும் கூறுகின்றனர், இன்னும் சில நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.