ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ரெட்டியின் டைரி என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தில் ஸ்ரீ ரெட்டி நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது என்று பரபரப்பு புகார் தெரிவித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. மேலும் பட வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்த சிலரின் பெயர்களையும் வெளியிட்டார் அவர்.
இந்நிலையில் அவரின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக உள்ளது. படத்தை அலாவுதீன் இயக்குகிறார். இது குறித்து ஸ்ரீ ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பட வாய்ப்பு தேடி வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தான் நான் வெளிப்படையாக கூறினேன். நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் குறித்து தயாராகும் படம் தான் ரெட்டியின் டைரி. இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
நல்லவர்கள் போன்று நடித்து சினிமாவில் மோசடி செய்யும் ஆசாமிகளின் முகத்திரையை இந்த படத்தில் கிழிப்போம். இந்த படம் தவிர 2 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்.
ஆந்திர மாநிலத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை. சுரேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்பட 4 குடும்பத்தின் பிடியில் தெலுங்கு திரையுலகம் உள்ளது. எனக்கு நடிக்க தடை விதித்தனர். நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கொடுக்கவில்லை. இந்த விஷயத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்ட பிறகே நான் நடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கினார்கள். தடை நீக்கப்பட்ட பிறகும் எனக்கு யாரும் வாய்ப்பு அளிக்கவில்லை. அரசும் எனக்கு உதவி செய்யவில்லை.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது ஒரு பெண்?: சத்தியமா ஐஸு கிடையாது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது ஒரு பெண்?: சத்தியமா ஐஸு கிடையாது
என் நீண்ட நாள் கவலையை ‘ஜீனியஸ்’ போக்கும்… இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை! என் நீண்ட நாள் கவலையை ‘ஜீனியஸ்’ போக்கும்… இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை!
மும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா?: ஆர்த்தி குமுறல் மும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா?: ஆர்த்தி குமுறல்
பாதுகாப்பு இல்லாத இடத்தில் இருந்து என்ன செய்வது என்று தான் சென்னையில் வந்து செட்டிலாகிவிட்டேன். தமிழ் மக்கள் பெண்களை மதிக்கத் தெரிந்தவர்கள். எனக்கு பிரச்சனை ஏற்பட்டபோது சென்னையில் இருப்பவர்கள் ஆதரவு தெரிவித்தனர். லாரன்ஸ் மாஸ்டர் வாய்ப்பு அளித்தாலும் நடிப்பேன். ரெட்டியின் டைரி படத்தில் என் வாழ்க்கை தொடர்பான காட்சிகள் இருக்கிறதா, உண்மை சம்பவ வீடியோக்கள் வருமா என்று எல்லாம் தற்போது கூற முடியாது. நடிகர் சங்கம் இந்த படத்தை தடுக்க நினைத்தால் அது பெரிய குற்றம் ஆகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா என் ரோல் மாடல். அவரின் துணிச்சல் எனக்கு பிடிக்கும். நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் வாய்ப்பும் உள்ளது. என் சுயசரிதையை புத்தகமாக எழுதுவேன். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை தொடர்ந்து வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.