விஜய் சினிமாவில் அறிமுகமாகி அவரது அப்பா இயக்கத்தில் நிறைய படங்கள் நடித்துள்ளார். அதில் ஒரு படம் ரசிகன், விஜய் நடித்த இப்படத்தில் நாயகியாக சங்கவி நடித்திருந்தார்.
இவர் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும்போது, அஜித்துடன் அமராவதி படத்திற்கு பிறகு உடனே ரசிகன் பட வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் என்னை கிளாமர் வேடத்தில் நடிக்க வைத்தார்கள், ஆனால் படம் சூப்பர் ஹிட். இனி இந்தப் பொண்ணு கிளாமர் வேடத்திற்கு தான் செட் ஆவார் என்று நிறைய விஜய் படங்களில் கிளாமரில் நடிக்க வைத்தார்கள்.
அப்போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருந்தது. பொற்காலம் படத்திற்கு பிறகு தான் ஹோம்லி பெண்ணாக மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று பேசியுள்ளார்.