தனது அழகாலும் நடிப்பாலும் ஹிந்தி திரைப்பட உலகின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தாலும் தமிழ் மக்களின் மனதில் அதிகம் இடம் பிடித்தது ஷாருக்கானுடன் தமிழ் பேசும் பொண்ணாக நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’
அண்மையில் ‘பத்மாவதி’ என்னும் படத்தில் ராணியாக நடித்ததினால் கொலைமிரட்டல்கள், எச்சரிக்கைகள், எதிர்ப்புகள் கிளம்பினாலும் உலக அளவில் பெயரும் புகழும் கிடைத்தது.
தீபிகா படுகோன்க்கும் பத்மாவதி படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங் க்கும் இடையில் கடந்த 2 வருடங்களாய் இருந்த காதல் இப்போது திருமணத்தில் வந்து நிற்கின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி திருமணம் நடக்க இரகசிய ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றது.
இத்தாலிய நாட்டில் நடைபெற இருக்கும் இவ் திருமணத்திற்க்கு நெருங்கிய உறவினர் நண்பர்கள் உடபட 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும் திருமண வரவேற்பினை பெரிதாக அனைவருக்கும் அழைப்பு கொடுத்து செய்ய தீர்மானித்துள்ளார்களாம்.