பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் என்னை பற்றி தப்புத் தப்பாக பேசுகிறார்கள். ஒரு 5 நிமிஷம் கொடுத்தால் அனைவரின் முகத்திரையையும் கிழிப்பேன் என்றீர்களே வைஷ்ணவி கொஞ்சம் கிழிங்களேன் என்றார் கமல்.
கமல் இப்படி கேட்பார் என்பதை சற்றும் எதிர்பாராத வைஷ்ணவி அதிர்ச்சி அடைந்தார். ஒரு வகையாக சமாளித்துக் கொண்டு இல்லை சார் ஒரு வீட்டில் நாம் ஒற்றுமையாக இருக்கணும். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒருத்தவங்களின் காலை வாரி, கீழே தள்ளி, ஏறி மிதிச்சு கிடைக்கும் வெற்றி எனக்கு தேவையில்லை என்று தோன்றுகிறது என்றார்.
வைஷ்ணவி சப்பைக் கட்டு கட்டியதை பார்த்த கமல் 5 நிமிடத்தில் ஒன்றரை நிமடம் முடிந்துவிட்டது. யாருடைய முகத்திரையையாவது கொஞ்சம் கிழிங்களேன் பார்ப்போம் என்றார்.
பண்ணும்னு இஷ்டம் இல்லை என்று சமாளித்த வைஷ்ணவியை பார்த்து அப்ப சொன்னீங்களே என்று நச்சுன்னு கேட்டார் கமல். யார் முகத்திரையையும் கிழிக்க விரும்பவில்லை என்று மீண்டும் விளக்கம் அளித்து மொக்கை போட்டார் வைஷ்ணவி.