பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்டு என்றியில் பங்கேற்றவர் நடிகை காஜல் பசுபதி. அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் இரண்டாவது சீசனில் உள்ள ஐஸ்வர்யா பற்றி கோபமாக பேசியுள்ளார்.
“கெட்ட வார்த்தை பேசிவது பாலாஜியின் சுபாவம், நானும் பேசுவேன், ஆனால் அவர் மீது குப்பை கொட்டியது தப்பு. அந்த சீனை டிவியில் பார்க்கும்போது எனக்கு பிபி ஏறிவிட்டது. அவரை பச்சை பச்சையாக திட்டினேன்” என பிரபல வளைதளம் ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், மஹத், யாஷிகா என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு அதையும் இதையும் செய்வதெல்லாம் ஏற்றுகொள்ளமுடியவில்லை. உமா ரியாஸ்-ன் மகன் ஷாரிக் மீது எனக்கு தனி அக்கறை உள்ளது. ஆனால், அவன் ஐஸ்வர்யாவால் கெட்ட பையன் என்ற ஒரு இமேஜை பெற்றுக்கொண்டான்.
அதை பற்றி இப்போது பேசவேண்டாம். முடிஞ்சுபோச்சு. அவனும் வெளிய வந்துட்டான் என கூறி ஐஸ்வர்யா-வை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.