தெய்வமகள் சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் இருகிறார்கள். இதில், வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சுஹாசினி. இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் வினோதினி ஆகும். சீரியலில் மட்டுமில்லாமல், பொது இடங்களிலும் இவரை பார்க்கும் ரசிகர்கள், அம்மக்கள் என பல பேர் இவரை வினோ, வினோ என்று தான் அழைக்கிறார்களாம்.
ஆனால், இவர் நடிகை தேவயாணி நடிப்பில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் தான் அறிமுகமானார்.சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சிறுவயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டிருக்கிறார் வினோதினி. ஆறாம் வகுப்பு பயிலும் போதே இசைப்பள்ளியில் சேர்ந்து முறையாக இசை கற்றுகொண்டிருகிராறாம். பல நிகழ்சிகளிலும், மேடை கச்சேரிகளிலும் பாடியுள்ள இவர் இன்னும் நன்றாக பாடி இசைத்துறையிலும் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
அது சரி, அது என்ன யாருக்கும் தெரியாத மேட்டர் எதோ சொல்றேன்-னு சொன்னிங்களே.? அது என்னன்னு தானே கேக்குறீங்க. ஆம், அம்மணியின் இளவயது முதலே இவரிடம் நிறைய பேர் காதலை சொல்லியிறுகிறார்களாம். ஆனால், அவற்றில் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்திருகிறார் வினோ.