சென்னை : சமீப சில நாட்களாக ஆர்ஜே பாலாஜி அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்நிலையில், அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி.
அரசியலுக்கு வரவிருப்பதாக சுவர் விளம்பரம், அரசியல் கட்சியின் கொடி என அதகளப்படுத்திய ஆர்ஜே பாலாஜி நேற்று சிஎஸ்கே மேட்ச்சின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ‘LKG’. அரசியல் படமான இதில் ஆர்ஜே பாலாஜி முழுநேர அரசியல்வாதியாக நடிக்கிறார்.
ஆர்ஜே பாலாஜி
எல்கேஜி .
பிக் எஃப்.எம் ஆர்ஜே-வாக பணியாற்றி பிரபலமான ஆர்ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருகிறார். இந்நிலையில், அவர் ‘எல்கேஜி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ‘எல்கேஜி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
ஐசரி கணேஷ் தயாரிப்பு
இயக்குநர்
அரசியல் படமான ‘எல்கேஜி’ படத்தில் ஆர்ஜே பாலாஜி அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சேர்மன் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபு என்பவர் இயக்குகிறார்.
ஆர்ஜே பாலாஜி ஜோடி
ப்ரியா ஆனந்த்
ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கட்சியின் மகளிர் அணித் தலைவி ப்ரியா ஆனந்த் என்று ஆர்ஜே பாலாஜி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
ஏ ஃபார் அரசியல்
சி ஃபார் கமிஷன்
ஆர்ஜே பாலாஜிக்கு ப்ரியா ஆனந்த் அரசியல் பாடம் சொல்லிக் கொடுப்பது போலவும் ஏ ஃபார் அரசியல், பி ஃபார் பினாமி மற்றும் சி ஃபார் கமிஷன் என்று கரும்பலகையில் எழுதியிருப்பது போன்றும் ஒரு புகைப்படத்தை ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.