மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெற்றி நடைபோட்ட படம் தான் 96 . படத்தில் சிறு வயது காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அழகனான கதை பேரழகான திரைக்கதை வருடிவிடும் வசனம் என்று படத்தில் எத்தனையோ விஷயங்கள்.பாடல் பற்றி கூறவேண்டுமானால் மிக அருமையான இசையமைப்பை கொண்டிருந்தது.படம் பார்க்கும் அனைவரையும் தங்களது பள்ளி பருவ வாழ்க்கையை படம் பிடித்த படம்.
இதற்க்கு காரணம் ராம் மற்றும் ஜானு என்ற பள்ளி பருவத்தில் வரும் இரண்டு நடிகர்கள் தான்.இப்படத்தில் ராம் கதாப்பாத்திரத்தில் நடித்த ஆதித்யா நாம் அனைவரும் அறிந்த எம் எஸ் பாஸ்கர் அவர்களின் மகன். அப்பா போலவே திரையுலகில் சாதிக்க முதல் படியாக இப்படம் அமைந்துள்ளது சிறப்பான ஒன்று