அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சில மணிநேரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இமான் இசையமைத்திருக்கும் இந்த பாடல்களில் ‘கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார் தாமரை.
இந்த பாடல் தனக்கு ஏன் மிகவும் நெருக்கமானது என்பதைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் 8 வயதாக இருக்கும்போது நடத்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி நெகிழ்ந்தார். அந்த பதிவில் “;எனக்கு 8 வயதிருக்கும். அஜித் சார் பெசன்ட் நகரில் இருக்கும் எங்கள் தாத்தாவின் வீட்டின் முன் ஷூட்டிங் செய்துகொண்டிருந்தார். முதல் தளத்தில் இருக்கும் ஜன்னலின் வழியே இதை பார்த்து நானும், எனது குடும்பத்தினரும் உற்சாகம் தாளாமல் கூச்சலிட்டுக் கொண்டிருந்தோம். இதைப் பார்த்த அவர் எங்களைக் கீழே வந்து போட்டோ எடுத்துக்கொள்ளுமாறு சைகை காட்டினார். இப்போது இந்த பாடல் பாடுவதன்மூலம் ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்யும் உணர்வு எனக்குக் கிடைக்கிறது”; என்று அவர் கூறியிருந்தார்.
ஆங்கில ட்வீட் கீழே,