நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புடன் கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு என்பவர் இந்த படத்தை இயங்குவதாகவும் இந்த படத்திற்கு ‘ராஜவம்சம்’ என்று பெயர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமாரின் ஜோடியாக நிக்கி கல்ரானி நடிக்கவுள்ளார். இவர்கள் தவிர சதீஷ், யோகிபாபு, தம்பிராமையா, ராதாரவி, நிரோஷா என சுமார் 49 பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கிறார்களாம்.
சசிகுமாரின் 19வது படமான ‘ராஜவம்சம்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சசிகுமார் தற்போழுது ‘நாடோடிகள் 2’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.