அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களுமே பொங்கலுக்கு வெளியாகி ஹிட் படங்களாக அமைந்துவிட்டது.
பேட்ட படத்தை தாண்டி விஸ்வாசம் படத்திற்கு குடும்பங்கள் அதிகம் வருவதால் பல திரையரங்குகளில் பிப்ரவரி முழுவதும் திரையிட முடிவு செய்துள்ளனர். இதனால் தல ரசிகர்கள் சொல்ல முடியாத அளவிற்கு கொண்டாட்டத்தில் உள்ளனர்.
25வது நாளை இரண்டு படங்களும் எட்டிவிட்டதால் தல, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அதற்கும் ஒரு கொண்டாட்டம் போட்டுவிட்டனர். சரி 25 நாள் முடிவில் சென்னையில் இரண்டு படங்களும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,
- பேட்ட- ரூ. 14.92 கோடி
- விஸ்வாசம்- ரூ. 12.41 கோடி