இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து நிறைய படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில் மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களும் வருட முதலில் ரிலீஸாக உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு சில படங்கள் மட்டும் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்கிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் டாப் 10 மற்றும் சிறந்த படங்களில் வட சென்னை, 2.0, பரியேறும் பெருமாள், ராட்சசன், நடிகையர் திலகம், 96, கோலமாவு கோகிலா என்று பல படங்கள் சிறந்த படங்களின் பட்டியலில் இணைந்தது.
அதே போன்று, இந்தாண்டு திரைக்கு வரும் 200க்கும் அதிகமான படங்களில் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் வெளியாகக் கூடிய படங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்…