சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் உருவாகி வருகின்றது.
இத்திரைப்படத்தில் சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். பெண்களின் கபடியை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருகின்றது.
15 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் சுமார் 300 கபடி வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.
பட குழுவினர் இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜமான போட்டியாகவே நடத்தி, படப்பிடிப்பை பதிவு செய்து வருகின்றார்கள்.
மேலும், இதன் இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடைபெறுகின்றது. இறுதிக்கட்ட காட்சி மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்புக்கள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்களோடு, இத்திரைப்படம் முழுமையடையுமென அதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்துள்ளார்.