நடிகர் ஆர்யாவுக்கும், வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவுக்கும் வருகிற மார்ச் 10 ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யாவுக்கு 38 வயது ஆகின்ற நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது.
கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஐதராபாத்தில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சாயிஷாவுக்கு 21 வயதாகிறது. இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.