தமிழில் பிக்பாஸின் 3வது சீசன் கடந்த மாதம் துவங்கி 20 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் தெலுங்கு பிக்பாஸின் மூன்றாவது சீசன் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்க விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இதில் எந்த பிரபலம் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்களோ என்று தெலுங்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவர்களின் கணிப்பில் இருக்கும் நடிகையான காயத்திரி குப்தா விரைவில் பிக்பாஸ் வீட்டில் நுழைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென இவர் பிக்பாஸ் நிர்வாகத்தின் மீதே பரபரப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இரண்டரை மாதத்திற்கு முன்பே ஒப்பந்தம் போட்டு தற்போது திரும்ப பெற்றுள்ளனர். இதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்தேன்.
பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா? என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டனர். டிஆர்பிக்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என அதன் நிர்வாகிகள் கேட்டனர்.
என்னுடைய சம்பளத்தையும் அவர்களே முடிவு செய்துவிட்டதால் என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என கூறினார்.